மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சௌதியின் மற்றொரு விமான நிலையம் மீது ஹௌதிகள் தாக்குதல்! ஒருவர் பலி!

சௌதி அரேபியாவின் தம்மம் விமான நிலையத்தின் மீதான ஹௌதிகளின் தாக்குதல் குறித்து...

houth attack on saudi airports

சௌதியின் ரியாத் விமான நிலையத்தின் மீதான ஹௌதி தாக்குதலின் சிசிடிவி காட்சிகள்... - AP | கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 11:31 am IST

சௌதி அரேபியாவின் தம்மம் விமான நிலையத்தின் மீது யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படைகளுக்கும், சௌதியின் ஆதரவுபெற்ற அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகின்றது.

இதில், ஹௌதி படைகள் சௌதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய்க் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தளவாடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், சௌதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தம்மம் நகரத்தின் கிங் ஃபஹத் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது ஹௌதிகள் புதன்கிழமை (அக். 21) இரவு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, புதன்கிழமை காலை சௌதியின் ஷாய்பா எண்ணெய் வயலைக் குறிவைத்து ஏவப்பட்ட ட்ரோன்களை அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்துத் தகர்த்தன. ஆனால், இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் பாகங்கள் விழுந்து இருவர் பலியாகினர்.

கடந்த அக்.10 மற்றும் அக்.11 ஆகிய தேதிகளில் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது ஹௌதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில், இந்தியர் ஒருவர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

One person has been reported killed in an attack by Yemen's Houthi rebels on Saudi Arabia's Dammam airport.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.