மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வளைகுடா பயணம்! சௌதி அரேபியாவுக்குச் சென்றார் பிரான்ஸ் அதிபர்!

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் சௌதி அரேபியாவுக்குச் சென்றுள்ளது குறித்து...

French President Emmanuel Macron

அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் உடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் - கோப்புப் படம் | AP

Published On :21 அக்டோபர் 2026, 7:14 pm IST

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரான் அரசு முறைப் பயணமாக சௌதி அரேபியாவுக்குச் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வளைகுடா நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வுக்காணும் நடவடிக்கையாக இந்தப் பயணத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கத்தாரில் தனது பயணத்தை முடித்துகொண்ட அதிபர் மேக்ரான் இன்று (அக். 21) மாலை சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்துக்குச் சென்றடைந்தாகக் கூறப்பட்டுள்ளது.

சௌதி மீதான யேமனின் ஹௌதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரான்ஸ் அதிபரின் இந்தப் பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. மேலும், இந்தப் பயணத்தில் அவர் சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, கூடுதல் எரிபொருள் விநியோகத்திற்காக ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிபர் மேக்ரான் சௌதி பயணத்துக்குப் பின்பு தாயகம் திரும்புவார் எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

French President Emmanuel Macron has arrived in Saudi Arabia on a state visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.