மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சௌதி அரேபியாவில் வங்கதேச தம்பதிக்கு மரண தண்டனை! சம்பவத்தின் பின்னணி என்ன?

சௌதி அரேபியாவில் வங்கதேச தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்னணி என்ன?

சௌதி அரேபியா -  மெக்கா

சௌதி அரேபியா - மெக்கா - ani

Published On :23 அக்டோபர் 2026, 12:49 pm IST

வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அது தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவு வருகின்றன.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகே, அதுபற்றி தங்களுக்குத் தெரிய வந்ததாக வங்கதேச அரசு தெரிவித்திருக்கிறது.

சௌதி அரேபியாவில் உள்ள புனித தலமான மெக்காவில் அநாகரீகமாக நடந்து கொண்டதாகப் பதிவான குற்றச்சாட்டின் கீழ், வங்கதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பசிர் என்ற இளைஞரும், ஸ்வீட்டி அக்தர் என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு அக். 14ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் வங்கதேசத்திலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சௌதி அரேபியாவில் பணியாற்றச் சென்றதாகவும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை, மிகச் சரியான தண்டனையான 'தாஸீர்' என்று சௌதி அதிகாரிகள் விவரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நீதித்துறை மறுஆய்வும் அரசாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டதாக அவர்கள் கூறியிருக்கிறார்.

ஆனால், அந்தப் பொது அறிக்கையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் செய்த ஒழுக்கக்கேடான செயல் என்று எதுவும் விளக்கப்படவில்லை, எங்கு நடந்தது என்ற இடத்தையும் அடையாளம் காட்டவில்லை, அவர்கள் கைது செய்யப்பட்ட தேதிகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

இந்த நிலையில்தான், தண்டனை விவரங்கள் குறித்துத் தங்களுக்கு முன்கூட்டியே தெரியாது என்றும், தலையிடுவதற்கு மிகத் தாமதமான பின்னரே அது குறித்துத் தெரிய வந்தது என்றும் டாக்கா தரப்பில் கூறப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்தில், வங்கதேசத்தவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதற்கு என்ன ஆதாரங்கள் காட்டப்பட்டன, பிரதிவாதிகளுக்கு வழக்குரைஞர்களும் உரிய மொழிபெயர்ப்பாளர்களும் அமர்த்தப்பட்டனரா? அவர்களால் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளவும், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்க்கவும் உரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டதா? என்பதற்கும் விடை காணப்படவில்லை.

இவர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், நஸ்ருல் மீது சைபர் குற்றச்சாட்டுகளும், அக்தர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விடியோக்களும் படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால், அது பற்றிய உண்மை நிலவரம் இதுவரை விளக்கப்படவில்லை.

Summary

Death penalty for a Bangladeshi couple in Saudi Arabia! What is the background of the incident?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.