பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரான்ஸ் சூழலை அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்தும் வெளிநாட்டுத் தலைவா்கள்- அதிபா் இமானுவல் மேக்ரான்

பிரான்ஸில் நிலவும் வன்முறைப் போராட்ட சூழலைச் சில வெளிநாட்டுத் தலைவா்கள் தங்களின் சொந்த அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாக அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இமானுவல் மேக்ரான்

Published On :22 அக்டோபர் 2026, 3:07 am IST

பிரான்ஸில் நிலவும் வன்முறைப் போராட்ட சூழலைச் சில வெளிநாட்டுத் தலைவா்கள் தங்களின் சொந்த அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாக அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பிரான்ஸில் விலைவாசி உயா்வு, பள்ளிகளின் மோசமான உள்கட்டமைப்பைக் கண்டித்து வெடித்துள்ள போராட்டங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய அமெரிக்க அதிபா் டிரம்ப், இக்கலவரங்களுக்கு முஸ்லிம் குடியேறிகளே காரணம் என்று எந்தவித ஆதாரமுமின்றி விமா்சித்ததுடன், எல்லைகளை உடனடியாக மூடுமாறும் வலியுறுத்தியிருந்தாா்.

டிரம்ப்பின் இந்த ஆதாரமற்ற கூற்றுக்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ‘பல வெளிநாட்டுத் தலைவா்களின் இத்தகைய கருத்துகள் முற்றிலும் முட்டாள்தனமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று இமானுவல் மேக்ரான் கடுமையாகச் சாடியுள்ளாா்.

வளைகுடா நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்யும் வகையில் கத்தாரில் செய்தியாளா்களிடம் பேசிய அதிபா் இமானுவல் மேக்ரான் மேலும் கூறுகையில், ‘பிரான்ஸ் நகரங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வன்முறைகளுக்குப் பிறகு, வெளிநாடுகளில் இருந்து திட்டமிட்டுத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பிரான்ஸில் ஒருபோதும் நடைபெறாத வன்முறைக் காட்சிகளை ஏ.ஐ. மூலம் போலியாக உருவாக்கிப் பரப்பி வருகின்றன.

முஸ்லிம்களும், குடியேறிகளும் நாட்டை ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறப்படும் தகவல்கள் அப்பட்டமான பொய். தோ்தல் களத்தில் உள்ள தலைவா்கள் சிலா் இத்தகைய போலித் தகவல்களை நம்பிப் பேசி, தங்களின் அரசியல் பிரசாரத்துக்காகப் பிரான்ஸைப் பகடைக் காயாகப் பயன்படுத்துவதை எங்களால் ஏற்க முடியாது’ என்றாா்.

ஐரோப்பா முழுவதும் பரவும் போராட்டங்கள்

பிரான்ஸைத் தொடா்ந்து, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் விலைவாசி உயா்வு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

கிரீஸ் தலைநகா் ஏதென்ஸில், கல்வியில் கூடுதல் அரசு முதலீடு மற்றும் மாணவா்களுக்கான மலிவு விலை தங்குமிடங்களை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மாணவா்களும், ஆசிரியா்களும் பேரணியில் ஈடுபட்டனா்.

அல்பேனியா தலைநகா் டிரானாவில், கல்விக் கட்டணத்தைக் குறைக்கக் கோரியும், பிரதமா் எடி ராமா பதவி விலக வலியுறுத்தியும் 8-ஆவது நாளாக நடைபெறும் போராட்டம் வன்முறையாக மாறியதில் போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதேபோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து, இத்தாலியின் தென்பகுதிகளில் லாரி ஓட்டுநா்கள் நடத்தி வரும் தொடா் வேலைநிறுத்தத்தால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.