மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குஜராத்தில் ரூ.19.41 கோடி மதிப்புள்ள 13 கிலோ வெளிநாட்டுத் தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

துபையில் இருந்து சூரத் சர்வதேச விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.19.41 கோடி மதிப்புள்ள 13 கிலோ வெளிநாட்டுத் தங்கத்தை பறிமுதல் குறித்து...

DRI seizes 13 kg foreign-origin gold worth around Rs. 19.41 crore

சூரத் சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.19.41 கோடி மதிப்புள்ள 13 கிலோ வெளிநாட்டுத் தங்கம் - எக்ஸ்

Published On :19 அக்டோபர் 2026, 9:53 pm IST

துபையில் இருந்து சூரத் சர்வதேச விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.19.41 கோடி மதிப்புள்ள 13 கிலோ வெளிநாட்டுத் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுதொடர்பாக 3 பேரைக் கைது செய்தனர்.

துபையில் இருந்து வதோதராவில் உள்ள ஒரு சட்டவிரோத கும்பலுக்கு, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், சூரத் சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமானப் பயணம் மூலமான கடத்தலைத் தடுக்க வகையில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அக்.16 முதல் 42 மணி நேரத்திற்கு ஒருங்கிணைந்த சோதனைகளை நடத்தினர். இதில், சுமார் ரூ. 19.41 கோடி மதிப்புள்ள 13.017 கிலோ வெளிநாட்டுத் தங்கம் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக 3 பேரைக் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நவீனமான மறைக்கும் முறைகளைப் பயன்படுத்தி, விமானப் பயணிகள் மூலம் நாட்டிற்குள் தங்கம் கடத்தப்படுவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரோடியம் பூசப்பட்ட மெல்லிய தங்கக் கம்பிகள், டிராலி பைகளின் உள் உறைகளில் பதிக்கப்பட்ட தங்கம் மற்றும் பைகளின் உள் உறைகளுக்குள் மறைக்கப்பட்ட தங்கப் பசை ஆகியவை இதில் அடங்கும்.

விமான நிலையத்திற்கு வெளியே வந்ததும் விமான நிலையங்களுக்கு வெளியே காத்திருக்கும் இடைத்தரகர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அவர்களிடம் இருந்து வதோதராவில் உள்ள ஒரு சட்டவிரோத தங்க உருக்கும் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு உருக்கப்பட்ட தங்கம் பின்னர் அகமதாபாத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

தங்கத்தை மறைத்தல், விமானப் பயணிகள் மூலம் கடத்துதல், இடைத்தரகர்களிடம் ஒப்படைத்தல், சட்டவிரோதமாக உருக்குதல் மற்றும் நகை விற்பனை நிலையம் மூலம் விற்பனை செய்தல் என ஒவ்வொரு இணைப்பையும் குறிவைத்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

DRI has dismantled an organised gold smuggling syndicate that brought foreign-origin gold into India through Sardar Vallabhbhai Patel International Airport, Ahmedabad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.