மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லி விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ. 4.03 கோடி தங்கம் பறிமுதல்!

தில்லி விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ. 4.03 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பற்றி...

3 kg gold worth Rs 4.03 crore seized from passenger at Delhi Airport

தில்லி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்..

Published On :19 அக்டோபர் 2026, 11:42 am IST

தில்லி விமான நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ. 4.03 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபையிலிருந்து இன்று தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இந்தியப் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவரது அனைத்து உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையில் கதவைத் தானாக மூடுவதற்காகத் தரையில் பொருத்தப்படும் 'ஃப்ளோர் ஸ்பிரிங்' (floor spring) எனும் கருவிக்குள் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, சுமார் ரூ. 4.03 கோடி மதிப்புள்ள 3.2 கிலோ எடையிலான அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து, சுங்கச் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக இந்தக் கருவியை அவர் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

'ஃப்ளோர் ஸ்பிரிங்' என்பது கதவு திறப்பதையும் மூடுவதையும் கட்டுப்படுத்தவும், கதவு தானாக மூடுவதை உறுதி செய்யவும் தரையின் அடியில் பொருத்தப்படும் ஒரு கருவியாகும்.

Summary

Gold rods weighing 3.2 kg and worth approximately Rs 4.03 crore were seized from an Indian passenger arriving from Dubai at Delhi's Indira Gandhi International Airport, a statement said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.