மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திடீரென இஸ்ரேல் சென்ற அமெரிக்க அமைச்சர்! நெதன்யாகு உடன் சந்திப்பு! காரணம் என்ன?

முன்னறிவிப்பின்றி அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத் இஸ்ரேல் சென்றிருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது...

US Defense Secretary Pete Hegseth

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத் - AP

Published On :20 அக்டோபர் 2026, 12:57 pm IST

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார்.

இஸ்ரேலில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத் எந்தவொரு முன்னறிவிப்பின்றி நேற்று (அக். 19) அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பயணத்தில், அமைச்சர் ஹெக்ஸெத் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இருப்பினும், இந்தச் சந்திப்புக்கான காரணம் குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசுகள் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

இந்தச் சந்திப்பு, இஸ்ரேலின் தெற்குப் பாலைவனப் பகுதியில் நடைபெற்றதாக இஸ்ரேல் ராணுவத்தின் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

காஸா மீதான இஸ்ரேலின் போருக்குப் பின்பு முதல்முறையாக நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார்.

இருப்பினும், நடைபெறவுள்ள தேர்தலில் நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையைப் பெறாது எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்தச் சூழலில், அமெரிக்க அமைச்சரின் இந்த திடீர் பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

US Defense Secretary Pete Hegseth has made an unannounced visit to Israel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.