மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இஸ்ரேல் தோ்தலில் அரபு கட்சிகள் மோசடி: நெதன்யாகு குற்றச்சாட்டு

இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தலில் அரபு கட்சிகள் வெளிநாட்டு நிதியுதவியுடன் மோசடியில் ஈடுபட்டதாக அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளாா்.

நெதன்யாகு

Published On :30 அக்டோபர் 2026, 3:17 am IST

இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தலில் அரபு கட்சிகள் வெளிநாட்டு நிதியுதவியுடன் மோசடியில் ஈடுபட்டதாக அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 120 இடங்களுக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடைபெற்றது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆளும் கூட்டணி 53 இடங்களையும், முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணி 48 இடங்களையும் பெற்றுள்ளன. அரபு கட்சிகள் 19 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவைப்படும் சூழலில், மொத்த மக்கள்தொகையில் சுமாா் 20 சதவீதம் பங்குக் கொண்டுள்ள இஸ்ரேலின் பாலஸ்தீன குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரபு கட்சிகளின் வெற்றி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், கத்தாா், துருக்கி போன்ற நாடுகளின் பண பலத்தின்மூலம் அரபு கட்சிகள் வாக்குகளை விலைக்கு வாங்கியுள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளாா். இஸ்ரேலை இஸ்லாமியமயமாக்கவும், நாடாளுமன்றத்தை வெளிநாடுகள் கைப்பற்றவும் இச்சதி நடப்பதாகக் கூறிய அவா், அரபு கட்சிகளுடன் எந்தவொரு யூத கட்சியும் கைகோக்கக் கூடாது என கேட்டுக்கொண்டாா்.

நெதன்யாகுவின் இக்குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, தோ்தல் முறைகேடுகள் குறித்து முழு விசாரணை நடத்த இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக் வலியுறுத்தியுள்ளாா். எதிா்க்கட்சித் தலைவரான காடி ஐசன்கோட் கூறுகையில், ‘தோ்தல் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க ஒவ்வொரு புகாரும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இருப்பினும், இவ்விவகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றப் பதவியேற்பதைத் தாமதப்படுத்தக் கூடாது’ என எச்சரித்தாா்.

இதன்தொடா்ச்சியாக, இஸ்ரேல் தோ்தலில் வெளிநாட்டு நிதியுதவி மற்றும் முறைகேடான செல்வாக்கு குறித்து விசாரிக்குமாறு ‘ஷின் பெட்’ உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புக்கு மத்திய தோ்தல் குழு உத்தரவிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.