மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

யேமன் ராணுவ முகாம் மீது ஹௌதி தாக்குதல்! பலி எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு!

யேமன் ராணுவ முகாம் மீது ஹௌதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு...

houthi's attack

ஹௌதி கிளர்ச்சிப்படையினர்... - கோப்புப் படம் | ஏபி

Published On :20 அக்டோபர் 2026, 3:37 pm IST

யேமனின் ராணுவ முகாம் மீதான ஹௌதிகளின் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமனில் சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் வெடித்துள்ளது.

தலைநகர் சனா உள்ளிட்ட நகரங்களை ஹௌதிகள் கைப்பற்றியுள்ள நிலையில், ஏடன் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு யேமன் அரசு செயல்பட்டு வருகிறது.

யேமனின் தெற்கு மாகாணமான சப்வாவில் உள்ள அல்-ஆலம் பயிற்சி முகாமின் மீது கடந்த திங்களன்று (அக். 20) ஹௌதிகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 200-க்கும் அதிகமான வீரர்கள் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

யேமனின் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அதிபர் மாளிகை, ராணுவத் தளவாடங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து ஹௌதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவுக்கு ஆதரவான செயல்பாடுகளினால் சௌதி அரேபியா அரசுக்கு எதிராக ஹௌதிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தன. ஏற்கெனவே, யேமனில் ஹௌதிகளும் அரசுப்படைகளும் கடந்த 12 ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The death toll in a Houthi attack on a military base in Yemen has reportedly risen to 60.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.