மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கனடாவில் இருந்து சுதந்திரம் பெறும் வாய்ப்பை நிராகரிக்கும் ஆல்பர்ட்டா!

கனடாவில் இருந்து சுதந்திரம் பெறும் வாய்ப்பை ஆல்பர்ட்டா மாகாண மக்கள் நிராகரித்துள்ளது குறித்து...

Alberta rejects a move toward independence from Canada

ஆல்பர்ட்டா மக்களுடன் கனடா பிரதமர் மார்க் கார்னி... - AP

Published On :20 அக்டோபர் 2026, 2:11 pm IST

கனடாவில் இருந்து சுதந்திரம் பெறும் வாய்ப்பை ஆல்பர்ட்டா மாகாண மக்கள் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் எண்ணெய் வளமிக்க மாகாணமான ஆல்பர்ட்டா அந்நாட்டில் இருந்து பிரிந்துச் செல்வது குறித்து ஆல்பர்ட்டா மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பின் முதற்கட்ட முடிவுகள் செவ்வாக்கிழமை (அக். 20) காலை வெளியாகியுள்ளன. இதுவரை எண்ணப்பட்ட 15 லட்சம் வாக்குகளில் சுமார் 76 சதவிகித மக்கள் ஆல்பர்ட்டா கனடா உடன் இணைந்திருக்க வேண்டுமெனவும், 24 சதவிகித மக்கள் பிரிந்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்கெடுப்பு சுதந்திரத்துக்கான நேரடி முடிவு இல்லை எனக் கூறப்படும் நிலையில், இதில் ஒப்புதல் கிடைத்திருந்தால் ஆல்பர்ட்டா கனடாவில் இருந்து பிரிந்துச் செல்வதற்கான மற்றொரு வாக்கெடுப்பிற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுபற்றி, கனடா பிரிதமர் மார்க் கார்னி கூறுகையில்,

“ஆல்பர்ட்டா மக்கள் தெளிவான முடிவை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ஒற்றுமையையும், ஒருங்கிணைந்த வளர்ச்சியையும், ஒருவரையொருவர் கவனித்துகொள்வதையும் தேர்ந்தெடுத்துள்ளனர். அதைவிட மேலாக, ஆல்பர்ட்டா மக்கள் கனடாவை தேர்ந்தெடுத்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவை அமெரிக்கா உடன் இணைக்க வேண்டுமெனத் தொடர்ந்து கூறிவருகிறார். இத்தகையச் சூழலில், இந்த வாக்கெடுப்பு கனடாவின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that the people of the province of Alberta have rejected the offer of independence from Canada.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.