மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

யேமன் ராணுவ முகாம் மீது ஹௌதி தாக்குதல்: 53 பேர் பலி

யேமன் நாட்டில் ராணுவ பயிற்சி முகாம் மீது ஹௌதி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 53 பேர் பலியானது குறித்து...

Houthi missile strike on Yemen camp kills 53

தாக்குதலில் உயிரிழந்தோர் - விடியோ க்ராப்

Published On :20 அக்டோபர் 2026, 5:00 am IST

யேமன் நாட்டில் ராணுவ பயிற்சி முகாம் மீது ஹௌதி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 53 பேர் பலியாகினர்.

ஈரான் ஆதரவு ஹௌதி அமைப்பினர், யேமனில் தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ளனர். இதனால், ஏடன் நகரைத் தற்காலிக நகராகக் கொண்டு யேமன் அரசு செயல்பட்டு வருகிறது.

யேமன் நாட்டில் அரசின் படைகளுக்கும் ஹௌதி அமைப்புக்கும் இடையே சுமார் 12 ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. ஒருபுறம் ஈரானும் அமெரிக்காவும் போரிட்டு வரும்நிலையில், மறுபுறம் யேமன் நாட்டு படைகளும் ஹௌதி அமைப்பினரும் போரிட்டு வருகின்றனர்.

கடந்த வாரம், தற்காலிகத் தலைநகர் ஏடனில் உள்ள அதிபர் மாளிகை மீதும் ஹௌதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் பலியாகினர். அதுமட்டுமின்றி, அந்நாட்டு பிரதமர் நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்த நிலையில், இன்று ஷப்வா மாகாணத்தில் உள்ள அல்-ஆலம் ராணுவ பயிற்சி முகாமின் மீது ஹௌதி அமைப்பினர் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 53 வீரர்கள் பலியாகினர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முகாமில் பலியானோர் அனைவரும் புதிதாகச் சேர்ந்த வீரர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், ராணுவ வீரர்களின் மரணத்துக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Summary

Houthi missile strike on Yemen camp kills 53

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.