மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஈக்வடாரில் தேவாலயத்தில் சோகம்: திருப்பலியின் போது சிலுவை சரிந்து விழுந்து பாதிரியார் பலி!

ஈக்வடார் நாட்டில் உள்ள தேவாலயத்தில் சிலுவை சரிந்து விழுந்து பாதிரியார் பலியான நிகழ்வு பற்றி..

Catholic priest killed by falling cross during livestreamed Mass in Ecuador

ஈக்வடாரில் தேவாலயத்தில் சிலுவை பாதிரியார் மீது விழுந்தபோது. - Photo grab x video.

Published On :19 அக்டோபர் 2026, 10:07 am IST

ஈக்வடார் நாட்டில் உள்ள தேவாலயத்தில் திருப்பலி உரையாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென சிலுவை சரிந்து விழுந்ததில் பாதிரியார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டின் குவாயாகில் பகுதியில் உள்ள தேவாலயத்தில், பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ் (53) சனிக்கிழமை இறைமக்களுக்குத் திருப்பலி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்குப் பின்புறம் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை திடீரென சரிந்து அவர் மீது விழுந்தது.

சிலுவை மோதிய அதிர்ச்சியில் பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ் அப்படியே நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதன் விடியோ காட்சிகளில், கீழே விழுந்த சிலுவை பீடப் பகுதியில் கிடப்பதும், பாதிரியார் பார்வையில் இருந்து மறைந்து போவதும் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் குறித்து குவாயாகில் பேராயர் மறைமாவட்டம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

பலியான பாட்ரிசியோ சான்செஸ் அந்தத் தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்தார். மேலும், அவர் 'மிகப் பரிசுத்த மீட்பரின் சபை'யின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இந்த நெஞ்சை பதறவைக்கும் விபத்தின் விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Summary

A priest preparing Communion was fatally struck by a falling crucifix during a livestreamed Mass in Ecuador, turning a moment of worship into a frantic rush to save him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.