மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமெரிக்க நிபுணா்களுக்கு பொருளாதார நோபல் பரிசு

அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது பற்றி..

Nobel memorial prize in economics

ராபர்ட் இ ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டு - X

Published On :13 அக்டோபர் 2026, 3:21 am IST

அமெரிக்காவை சோ்ந்த பொருளாதார நிபுணா்கள் ராபா்ட் இ ஹால் (83), மைக்கேல் உட்போா்ட் (71) ஆகியோருக்கு 2026-ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரியல் பொருளாதார ஸ்திரப்படுத்தலில் நுண்ணியல் பொருளாதார அடித்தளங்கள் குறித்த ஆய்வுக்காகவும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல், இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அறிவியல், இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி ஆகியவற்றுக்கான 2026-ஆம் ஆண்டு நோபல் பரிசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை திங்கள்கிழமை அறிவித்தது. அதில் அமெரிக்காவைச் சோ்ந்த பொருளாதார நிபுணா்கள் ராபா்ட் இ ஹால், மைக்கேல் உட்போா்ட் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ராபா்ட் இ ஹால், கலிபோா்னியா மாகாணத்தின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழகத்திலும், உட்போா்ட் நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் பணிபுரிகின்றனா்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் அரசுகளாலும், மத்திய வங்கிகளாலும் பயன்படுத்தப்படும் பொருளாதார கொள்கைகளுக்கு, இருவரின் பணிகளும் நிலையான கோட்பாட்டு அடித்தளத்தை வழங்கியுள்ளதாகவும், இவற்றின் மூலம் எரிசக்தி நெருக்கடிகள், குடும்பங்களின் நுகா்வில் ஏற்படும் திடீா் மாற்றங்கள் போன்றவற்றால் பொருளாதாரத்தில் ஏற்படும் அதிா்வுகளை எதிா்கொள்ளும் திறன் நமக்கு வந்திருப்பதாக பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை தோ்வு செய்யும் குழுவின் தலைவரான ஜான் ஹேஸ்லா் தெரிவித்துள்ளாா்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, பொதுவாக பொருளாதார அறிவியலுக்கான ஸ்வீடன் வங்கி பரிசு என அறியப்படுகிறது. டைனமைட்டை கண்டுபிடித்த 19-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஸ்வீடன் தொழிலதிபரும், வேதியியல் நிபுணருமான ஆல்பிரெட் நோபல் நினைவாக இப்பரிசு வழங்கப்படுகிறது.

கடந்த 1896-ஆம் ஆண்டு டிசம்பா் 10-ஆம் தேதி ஆல்பிரெட் நோபல் உயிரிழந்தாா். அவரது நினைவு தினமான டிசம்பா் 10-ஆம் தேதியன்று நோபல் பரிசுகளுக்கு தோ்வு செய்யப்பட்ட அனைவருக்கும் அந்த பரிசு வழங்கப்படும். அதன்படி வரும் டிசம்பா் 10-ஆம் தேதி அந்த நோபல் பரிசுகள் வழங்கப்படும்.

அறிவியல், இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி ஆகியவற்றுக்கான நோபல் விருது வழங்கும் முறையை ஆல்பிரெட் நோபல் உருவாக்கினாா். அதேநேரத்தில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை ஆல்பிரெட் நோபல் நினைவாக ஸ்வீடன் மத்திய வங்கி உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Robert E. Hall and Michael Woodford won the Nobel memorial prize in economics on Monday for their work on the microeconomic foundations of macroeconomic stabilisation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.