தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அமெரிக்க தேர்தலில் டிரம்ப் படுதோல்வி! சமூக வலைத்தளங்களில் களைகட்டிய கொண்டாட்டம்!!

அமெரிக்க தேர்தலில் டிரம்ப் படுதோல்வியை சந்தித்த நிலையில் சமூக வலைத்தளங்களில் களைகட்டிய கொண்டாட்டம்

வெள்ளை மாளிகையில் டிரம்ப் - AP

Published On :5 நவம்பர் 2026, 12:41 pm IST

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

இதுவரை தான் வைத்ததுதான் சட்டம் என்று நினைத்ததையெல்லாம் உத்தரவாகப் பிறப்பித்து கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மையை இழந்துவிட்டதால், அவரது தன்னிச்சையான அதிகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

அதிபர் டொனால்ட் டிரம்பால் இனி எந்த சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. இதுநாள் வரை போர், பரஸ்பர வரி, விசா மறுப்ப என தான் நினைத்தது எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொண்டு தன்னுடைய நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்ததால் எண்ணற்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தற்போது அவரது அதிகாரம், செல்வாக்கு என அனைத்தும் காலியாக, நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.

விடியோக்களும், புகைப்படங்களும், கேலி சித்திரங்களும் என சமூக வலைத்தளங்களில் நேற்று முழுக்க டிரம்ப் தான் பேசுபொருளாகியிருந்தார்.

தள்ளவண்டியில் சர்பத் தயார் செய்யும் டிரம்ப், உணவகத்தில் வேலை செய்வது போன்ற கேலி சித்திரங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இன்று டிரம்பின் மீம் தினம் என்று அமெரிக்கர்கள், தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் ஏராளமான மீம்ஸ்களை பகிர்ந்தும், ரீ ஷேர் செய்தும் கொண்டாடி வருகிறார்கள்.

Summary

Trump suffers a crushing defeat in the US election! Celebrations erupt on social media!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.