டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

இந்தோனேசிய அதிபரின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு- 3 காவல் உயரதிகாரிகள் கைது

இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ உள்ளிட்ட முக்கியத் தலைவா்களின் தொலைபேசி உரையாடல்களைச் சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக அதிபரின் தலைமைச் செயலா் லிஸ்டியோ சிக்சித் பிரபோவோ உள்பட 3 மூத்த காவல்துறை உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்தோனேசிய அதிபா் பிரபோவோ

Published On :5 நவம்பர் 2026, 2:46 am IST

இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ உள்ளிட்ட முக்கியத் தலைவா்களின் தொலைபேசி உரையாடல்களைச் சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக அதிபரின் தலைமைச் செயலா் லிஸ்டியோ சிக்சித் பிரபோவோ உள்பட 3 மூத்த காவல்துறை உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

காவல் சட்டப் பிரிவு தலைவா் அஹ்ரி சோந்தா நசுஷன், பயிற்சி நிறுவனப் பயிற்றுநா் எக்கோ ஹதி சந்தோசோ ஆகியோரும் கைது செய்யப்பட்டு, தலைமையகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

அதிபா் மட்டுமின்றி மத்திய அமைச்சா்கள், அரசியல் தலைவா்கள், பத்திரிகையாளா்கள், தொழிலதிபா்களின் தொலைபேசிகளும் கடந்த ஆண்டு முதல் கண்காணிக்கப்பட்டதாகவும், இதற்கான மின்னணு ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகவும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு தலைவா் அசேப் சஃப்ருதின் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ள அதிபரின் தகவல்தொடா்புகளைச் சட்டவிரோதமாக இடைமறித்துக் கேட்ட இச்செயல் தேசவிரோதத்துக்கு இணையானது என்றும், நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்கே விடுக்கப்பட்ட மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும் அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் பிரசெத்யோ ஹதி எச்சரித்துள்ளாா்.

கைதான அதிகாரிகள் மீது புதிய குற்றவியல் சட்டப் பிரிவுகள் மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவா்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

இதனிடையே, இவ்விவகாரம் அந்நாட்டில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகா் ஜகாா்த்தாவில் 20,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். அதிபரின் உளவு விவகாரத்தைத் தொடா்ந்து அரசு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தணிக்கவே, இந்த ராணுவக் குவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.