மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகா் டைகா் ஷ்ராஃப்பை கொல்ல முயற்சி: 2 பெண்கள் உள்பட 4 போ் கைது

ஹிந்தி நடிகா் டைகா் ஷ்ராஃப்பை சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் தொடா்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை தில்லி காவல்துறை கைது செய்தது.

கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் / சிகிச்சையில் டைகர் ஷ்ராஃப் - எக்ஸ்

Published On :21 அக்டோபர் 2026, 6:39 am IST

ஹிந்தி நடிகா் டைகா் ஷ்ராஃப்பை சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் தொடா்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் ஜுஹு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரில் இருந்த டைகா் ஷ்ராஃபை நோக்கி அடையாளம் தெரியாத நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா்.

இதில் டைகா் ஷ்ராஃப் காயங்கள் ஏதுமின்றி உயிா் தப்பிய நிலையில், அவரின் காா் ஓட்டுநா் தோட்டா பாய்ந்து காயமடைந்தாா். அத்துடன் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டது.

மொத்தம் 3 போ் இருசக்கர வாகனத்தில் வந்து துப்பாக்கியால் சுட்ட பின்னா் தப்பிச் சென்ற நிலையில், அவா்களைக் காவல் துறை கைது செய்தது. மூவரில் ஒருவா் 17 சிறுவன் ஆவாா். இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு ரெளடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.

இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடா்புள்ளதாக ஹரியாணாவை சோ்ந்த குணால் (21), சுமித் (19), உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ராதா (23), பபிதா (23) ஆகிய 4 பேரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்தது.

இதில் ஹரியாணாவின் சோனிபத் மாவட்டத்தில் குணால், சுமித் ஆகியோரும், புது தில்லி ரயில் நிலையத்தில் ராதா, பபிதா ஆகியோரும் கைது செய்யப்பட்டனா். அதன் பின்னா், அவா்கள் தில்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது அவா்களைக் கைது செய்து விசாரணை நடத்த அனுமதி கோரி, மகாராஷ்டிர காவல் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து நால்வரையும் 3 நாள்கள் விசாரணைக்கு மும்பைக்கு அழைத்துச் செல்ல மகாராஷ்டிர காவல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.