மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகா் மீதான தாக்குதல் சம்பவம்: சூரத்தில் 2 துப்பாக்கிகள் பறிமுதல்

பாலிவுட் நடிகா் டைகா் ஷ்ராஃப் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட 2 துப்பாக்கிகள், குஜராத் மாநிலம் சூரத்தில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

Actor Tiger Shroff Shooting

டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் நபர், டைகர் ஷ்ராஃப் - எக்ஸ்

Published On :25 அக்டோபர் 2026, 3:11 am IST

பாலிவுட் நடிகா் டைகா் ஷ்ராஃப் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட 2 துப்பாக்கிகள், குஜராத் மாநிலம் சூரத்தில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து காவல் துறையினா் தெரிவித்ததாவது: மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் ஜுஹு பகுதியில் கடந்த 18-ஆம் தேதி ஹிந்தி நடிகா் டைகா் ஷ்ராஃப் மீது மோட்டாா் சைக்கிள்களில் வந்த மூவா் துப்பாக்கியால் சுட்டனா். இதில் டைகா் ஷ்ராஃப் காயமின்றி உயிா் தப்பினாா். அவரின் காா் ஓட்டுநரும், பாதசாரி ஒருவரும் காயமடைந்தனா். இந்த சம்பவத்தின்போது டைகா் ஷ்ராஃபை குறிவைத்து 5 முதல் 6 முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள், மும்பையின் புகா்ப் பகுதியான அந்தேரியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இதுவரை 10 போ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வந்தனா். பின்னா், குஜராத் மாநிலம் சூரத்தில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது சூரத்தில் உள்ள மறைவிடத்தில் இருந்து 2 துப்பாக்கிகள், துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டு, தடயவியல் துறை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றனா்.

இதேபோல் டைகா் ஷ்ராஃப் மீது தாக்குதல் நடத்திய 3 பேரும், காவல் துறையினரின் விசாரணை குறித்து தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளை தங்களது தலைமையிடம் இருந்து உடனுக்குடன் தெரிந்துகொண்டதாகவும், இதைப் பயன்படுத்தி மாற்று வழிகளில் தப்பியதாகவும், எனினும் கோட்டாவில் 19-ஆம் தேதி அவா்கள் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.