மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

டைகர் ஷ்ராஃப் மீதான துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

Actor Tiger Shroff Shooting

டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் நபர், டைகர் ஷ்ராஃப் - எக்ஸ்

Published On :21 அக்டோபர் 2026, 7:37 pm IST

நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரத்துல் மேலும் 2 பேர் இன்று (அக். 21) கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்த விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப், அக். 18 ஆம் தேதி இரவு மும்பை ஜூஹூவில் உள்ள புஷ்பா பூங்காவில் கால்பந்து விளையாடிவிட்டு காரில் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் டைகர் ஷ்ராஃப் காயங்களுடன் உயிர்த் தப்பிய நிலையில் அவரின் கார் ஓட்டுநர் மீது தோட்டா பாய்ந்தது. மேலும், அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டது.

இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட நிலையில், அவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் தேடிப் பிடித்து கைது செய்தனர்.

இதுமட்டுமின்றி டைகர் ஷ்ராஃப் மீதான தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அக்குழுவைச் சேர்ந்த ஒருவரை குஜராத்தில் காவல் துறை கைது செய்தது.

மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக சமீர் மற்றும் ஜதின் ஆகிய இருவரை மும்பை காவல் துறை கைது செய்தது. முன்னதாக இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜதின், துப்பாக்கிச்சூடு நடத்திய மூவருடன் ஒரே அறையில் தங்கியிருந்தவர் என காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், தங்கியிருந்த இடங்கள், விடுதிகள், அவர்களுக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தவர்கள் என காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Actor Tiger Shroff Shooting Case 2 more people arrested 10 people so far

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.