மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கி சூடு... வாய் திறக்காத பாலிவுட் பிரபலங்கள்!

டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கி சூடு குறித்து...

நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான்,

Published On :20 அக்டோபர் 2026, 11:19 am IST

டைகர் ஷெராஃப் மீது லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் நடத்திய தாக்குதலுக்குப் பிரபலங்கள் கருத்து சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப், மும்பை ஜூஹூவில் உள்ள புஷ்பா பூங்காவில் கால்பந்து விளையாடிவிட்டு காரில் திரும்பும்போது இருசக்கர வாகனத்தில் காத்திருந்த 3 பேர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இருந்தாலும் உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், அவரின் 2 உதவியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து காயத்திற்கு சிகிச்சை எடுத்து வீடு திரும்பியதும் டைகர் ஷெராஃபை மகாராஷ்டிரத்தின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சந்தித்தார்.

தற்போது, துப்பாக்கியால் சுட்ட மூன்று பேரையும் மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது.

இருப்பினும் பாலிவுட் நட்சத்திரங்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலைக் கொடுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மீது பெரிய நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. பஞ்சாப் பாடகர் சித்து மூஸா வாலா படுகொலைக்குப் பின் சல்மான் கான், டைகர் ஷெராஃப் என அடுத்தடுத்து பிரபலங்களையும் இக்கும்பல் குறி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட தூப்பாக்கி சூடுக்கு அவர் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்ததே காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், டைகர் ஷெராஃப் மீதான தாக்குதலைக் கண்டித்து நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் கருத்து ஏதும் சொல்லவில்லை. மௌனமாக இதனைக் கடந்து செல்வதற்கான முனைப்பைக் காட்டுவதாகவே தெரிகிறது.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின்னர், பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நேரில் சென்று டைகர் ஷெராஃபுக்கு தன் ஆறுதலைக் கூறினார். மேலும், பூனம் பாண்டே, சத்ருஹன் சின்ஹா உள்ளிட்டோர், ’பிரபலங்களின் மீதான பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாக’ டைகருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.

ஏதாவது கருத்து சொல்லப்போய் நமக்கு வம்பு வந்துவிடுமோ என்கிற பயத்தில்தான் இச்சம்பவம் குறித்து பாலிவுட் நட்சத்திரங்கள் பொதுவெளியில் பேச மறுக்கிறார்கள் என ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.

Celebrities are remaining silent on the attack on Tiger Shroff by Lawrence Bishnoi's gang.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.