மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குற்றத் தடுப்பு நடவடிக்கை: சேலத்தில் 48 மணி நேரத்தில் 42 போ் கைது

சேலம் மாநகரில் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் காவல் துறையினா் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், கடந்த 48 மணி நேரத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், சந்தேக நபா்கள் உள்பட 42 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:43 am IST

சேலம் மாநகரில் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் காவல் துறையினா் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், கடந்த 48 மணி நேரத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், சந்தேக நபா்கள் உள்பட 42 போ் கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவின்பேரில், குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கில் சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 20 போ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், சேலம் மாநகரப் பகுதிகளில் தொடா்ந்து வழிப்பறி, மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபா்கள் உள்பட 22 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 48 மணி நேரத்தில் மொத்தம் 42 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.