கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரஷியாவில் தொழில்துறை நிறுவனம் மீது ட்ரோன் தாக்குதல்

மாஸ்கோவிற்கு கிழக்கே உள்ள தொழில்துறை நிறுவனம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பற்றி...

Ukrainian drones hit Russia's Kirishi oil refinery, fire sparked by debris

ரஷியா. - AF

Published On :1 நவம்பர் 2026, 3:15 pm IST

மாஸ்கோவிற்கு கிழக்கே உள்ள தொழில்துறை நிறுவனம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

ரஷியாவின் க்ஸ்டோவோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது இரவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அதில் எரிபொருள் மற்றும் லூப்ரிகன்ட்களை உற்பத்தி செய்யும் ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று என்றும் குறிப்பிட்டன. இந்த நிலையில் பல நாட்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் மீண்டும் தொடங்கியுள்ளதாக மாஸ்கோ வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து நிஸ்னி நோவ்கோரோட்டின் ஆளுநர் கிளெப் நிகிடின், இரவில் பெரிய ட்ரோன் தாக்குதல் நடந்ததாகவும், அதில் க்ஸ்டோவோ மாவட்டத்தில் உள்ள தொழில்துறை நிறுவனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அவர் தனது அறிக்கையில், 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் அழிக்கப்பட்டன என்றும், முதற்கட்ட தகவல்களின்படி, உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், அந்த ஆலையின் செயல்பாடுகள் என்ன என்பதை அவர் குறிப்பிடவில்லை.

பிப்ரவரி 2022-இல் ரஷியா தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, உக்ரைனிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ரஷியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உக்ரைனின் தலைநகரான கீவ் ரஷிய எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. மறுபுறம், அமெரிக்க அதிபர் டிரம்ப், டீசல் விலை உயர்வுக்கு இத்தகைய தாக்குதல்களே காரணம் எனக் கூறி, இவற்றை நிறுத்துமாறு உக்ரைனுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Russia said Sunday that a drone had struck an "industrial enterprise" east of Moscow overnight, after Ukraine claimed it had hit a major oil refinery.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.