மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குடிநீருக்காக மோதல்: ஆப்ரிக்க நாட்டில் 25 பேர் பலி!

நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக இனக்குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 25 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published On :1 நவம்பர் 2026, 8:59 pm IST

ஆப்ரிக்க நாடான சாட்டில், நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக இனக்குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 25 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்ரிக்க கண்டத்தில் அமைந்துள்ளது சாட் (Chad) நாடு. ஐ.நா. சபையின் கூற்றுப்படி காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்நாடு கருதப்படுகிறது. இங்கு நீர், நிலம் மற்றும் கால்நடைகள் தொடர்பாக இனக்குழுக்களிடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

சாட் நாட்டில் கடந்த வெள்ளியன்று (அக். 30) கிரெடா இனத்தைச் சேர்ந்த கால்நடைகள் மேய்க்கும் ஒருவர், தனது கால்நடைகளுக்கு நீர் புகட்ட ஒரு குளத்திற்கு வந்தபோது, குக்கா என்ற சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இரு சமூகத்தினரிடையே வன்முறை ஏற்பட்டதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கிரெடா இனத்தவர் தனது துப்பாக்கியை எடுத்து குக்கா இனத்தைச் சேர்ந்த நபரின் காலில் சுட்டார். இதனால், இரு சமூகத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு மோதல் வெடித்தது. இதில், 22 பேர் காயமடைந்தனர்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த மோதலை அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சாட் நாட்டின் ஹட்ஜர்-லாமிஸ் மற்றும் பஹ்ர் எல்-கசால் மாகாணங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்த வன்முறையில் இதுவரை 25 பேர் பலியானதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அமைச்சர்கள் குழு வன்முறை நடைபெற்ற இடங்களைப் பார்வையிட்டனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான சாட் முழுவதும் நீர் ஆதாரங்கள் தொடர்பான அணுகுமுறை சமமற்ற முறையில் உள்ளது. அதேநேரம், வளங்கள் பற்றாக்குறையாக உள்ளதால் அங்கு அது தொடர்பான மோதல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

ஐ.நா. சபையின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டிம் அந்நாட்டில் 10%-க்கும் குறைவான குடும்பங்களுக்கு மட்டுமே தொடர்ந்து பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், அந்நாட்டில் கிணறு பயன்பாடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 44 பேர் கொல்லப்பட்டு 10 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Reports indicate that 25 people have been killed in a conflict between ethnic groups over the use of water resources.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.