கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேனி கைதிகள் விவகாரம்: மூளையாக செயல்பட்டவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்!

லிங்க பிரசாத் உள்பட 3 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றம்.

theni jail

தேனி மாவட்ட சிறை - படம்: தினமணி

Published On :29 அக்டோபர் 2026, 5:43 pm IST

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில், லிங்க பிரசாத், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை உள்ளது. இந்தச் சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் 3-ஆவது அறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, 3-ஆவது அறைக் காவலர் ஸ்டாலின் பிரபு அந்த அறைக்குச் சென்று பாா்த்தார். அப்போது, அந்த அறையிலிருந்த முத்து இளங்கோவன் உள்ளிட்ட 17 பேர் ஸ்டாலின் பிரபுவைத் தாக்கியதுடன், நுழைவு வாயிலிருந்த காவலர் தங்கபாண்டியையும் தாக்கி, அவரிடமிருந்த சாவியைப் பறித்து கதவைத் திறந்து தப்பிச் சென்றனர்.

இதனிடையே, தப்பியோடிய விசாரணைக் கைதியான நவீன் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறையில் மீண்டும் சரணடைந்தார். மற்ற கைதிகளை போலீஸார் தேடி வந்த நிலையில், திருமலாபுரம் மலைப் பகுதியில் மறைந்திருந்த தேவாரத்தைச் சோ்ந்த சிலம்பரசன், மதுரையைச் சேர்ந்த ராஜா சிக்கந்தர், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சிறைப் பகுதி அருகேயுள்ள சாலையில் கைதி லிங்க பிரசாத் ஆட்டோவில் ஏறிச் சென்ற போது, ரோந்துப் பணியிலிருந்த போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

இதனிடையே, சிறையின் பின்னால் உள்ள மலைப் பகுதியில் ட்ரோன் மூலம் போலீஸார் கண்காணித்த போது, அங்கு மறைந்திருந்த மதுரையைச் சேர்ந்த சோலை முகிலேஸ்வரன், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, கார்த்திக் ராஜா, சிவகங்கையைச் சேர்ந்த தருண்குமார் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

மேலும், தப்பியோடிய மதுரையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், திருப்பதி, பொன் முத்துசெல்வம், கன்னியாகுமாரியைச் சேர்ந்த ரெஜின் ஆகிய 4 கைதிகளை போலீஸார் தேடி வந்தனர்.

தொடர்ந்து, ஆண்டிபட்டி அருகேயுள்ள அம்மச்சியாபுரம் மலைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை போலீஸார் ரோந்து சென்ற போது, பொன் முத்துசெல்வம், ரெஜின் ஆகியோரைக் கைது செய்தனர்.

இதனிடையே, கைதிகள் திருப்பதி, மீனாட்சிசுந்தரம் இருவரும் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைய உள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களை செல்லும் வழியிலேயே போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில், தேனி சிறையில் கைதிகள் தப்பிக்க மூளையாக செயல்பட்ட லிங்க பிரசாத்தை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லிங்க பிரசாத் உள்பட 3 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Summary

In connection with the escape of prisoners from the Theni prison, Linga Prasad has been transferred to the Palayamkottai Central Prison.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.