மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமெரிக்காவுடனான புதிய போர் முந்தைய போரைவிட நீண்டகாலம் நீடிக்கும்: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்காவுடன் புதிய போர் ஏற்பட்டால் அது முந்தைய போரை விட நீண்டகாலம் நீடிக்க வாய்ப்புள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் - AP

Published On :1 நவம்பர் 2026, 6:07 pm IST

அமெரிக்காவுடன் புதிய போர் ஏற்பட்டால் அது முந்தைய போரை விட நீண்டகாலம் நீடிக்க வாய்ப்புள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளார் முகமது அக்ரமினியா ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய போர் முந்தைய போரை விட நீண்டகாலம் நீடிக்கும். அந்த போர் முடியும் நேரத்தையோ அல்லது நிபந்தனைகளையோ தீர்மானிக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருக்கமாட்டார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி பேசுகையில், “ஈரான் மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பதிலடி வழங்கப்படும். ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக செயல்படுபவர்கள், ஈரானின் தற்காப்பு நடவடிக்கையின் தாக்கத்தையோ அதன் விளைவுகளையோ தீர்மானிக்க முடியாது” என எச்சரித்துள்ளார்.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளரான ஹுசைன் மொஹேப்பி, நாட்டின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனி அனுப்பிய செய்தியை பிரதிபலிக்கும் விதமாக அரசு தொலைக்காட்சியில் பேசினார். அதில், “அமெரிக்காவுடனான மோதலில் எந்தவொரு புவியியல் வரம்புகளும் எங்களுக்கு இல்லை. எதிரிகளைத் தாக்குவதற்கு ஒரு மிகப்பெரிய களத்தை வரையறுத்துள்ளோம்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கா புதிய தாக்குதல்கள் நடத்தினால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

இதுதொடர்பாகப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் ராணுவத்தை முடிந்தவரை அழித்துவிட்டதாகக் கூறினார். மேலும், “நாம் அவர்களின் அணு ஆயுத பயன்பாட்டைச் செயலிழக்கச் செய்துவிட்டோம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு இடங்களை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால் அதை வெறும் 10 நிமிடங்களில் செய்துவிடலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

A new war with the US would last longer than the previous one: Iran warns!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.