இரவு 1 மணிக்கு செல்போனில் அழைத்தாலும் அவர்கள் பதிலளிப்பார்கள் என்று புர்ஜ் கலிஃபவை கட்டிய கட்டுமான நிறுவனர் முகமது அலாபர் இந்திய தொழிலாளர்களை அதிகம் வேலைக்கு அமர்த்துவது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முகமது அலாபர், நல்ல திறமையான இந்திய தொழிலாளர்களையே நான் பெரும்பாலும் பணியமர்த்துவேன், அதற்கு ஒரே இடத்தில் நிலையாக பணியாற்றுவது, கடமை உணர்வு, கூடுதல் முயற்சி எடுக்கும் போக்கு போன்றவைதான்.
பல நேரங்களில் இந்திய தொழிலாளர்கள் நள்ளிரவு 1 மணிக்கு செல்போனில் அழைத்தாலும் அவர்கள் போனை எடுத்துப் பேசுவதை நான் கவனித்திருக்கிறேன். அது அவர்களுடைய பணியின் மீது அவர்கள் வைத்திருக்கும் பொறுப்பையே காட்டுகிறது என்று பாராட்டியிருக்கிறார்.
நான் எப்போதும் என்னுடன் இருப்பவர்களிடம் சொல்லுவேன், என்னடைய அறிவாற்றல் சராசரியானது, ஆனால், என்னுடைய கடினமான உழைப்பு அற்புதமானது. நான் என்னுடைய கடின உழைப்பை நம்புகிறேன் என்று அலாபா கூறியிருக்கிறார்.
நான் இந்த குணத்தை நேரடியாக இந்திய தொழிலாளர்களிடம் பார்க்கிறேன், எந்த அளவுக்கு கடினமாக வேலை செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். திறமை கடினமாக உழைக்கத் தவறும்போது, கடின உழைப்பு திறமையை வெல்லும் என்று ஒரு பழமொழி உண்டு. இதனால்தான் நான் இந்தியர்களைப் பணியமர்த்த விரும்புகிறேன், ஏனென்றால் அவர்கள் அதிகாலை ஒரு மணிக்குக் கூட தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பார்கள் என்று அவர் புகழ்ந்துள்ளார்.
கரோனா, பொருளாதார நெருக்கடி போன்ற காலங்களில் நிறுவனங்களும் நிச்சயமற்ற சூழல்களை எதிர்கொண்டு, விழிப்புடன் அபாயங்களைத் தாண்டி தொடர்ச்சியாக தங்கள் செயல்பாடுகளை உத்வேகப்படுத்தவே உழைக்கின்றன. ஆனால், அச்சுறுத்தல்கள் வந்த பிறகு அதனை எதிர்கொள்வதைவிட, முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப தயாராவதே நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
2008 மற்றும் கரோனா போன்ற பேரிடர் காலங்களில் இருந்து நிறுவனங்கள் பாடம் கற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா

மதுரையில் பரவலாக மழை

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

