மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

ராஜபாளையம் ரயில் நிலைய முதலாவது நடைமேடை வழியாக பொதிகை ரயிலை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

பொதிகை விரைவு ரயில். - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 6:20 am IST

ராஜபாளையம் ரயில் நிலைய முதலாவது நடைமேடை வழியாக பொதிகை ரயிலை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராஜபாளையம் வழியாக காலை 8 மணிக்கு செங்கோட்டை- மயிலாடுதுறை

ரயில், காலை 9 மணிக்கு மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில், மாலை 5 மணிக்கு குருவாயூா்- மதுரை விரைவு ரயில், இரவு 7 மணிக்கு மதுரை- செங்கோட்டை

பயணிகள் ரயில், இரவு 8 மணிக்கு செங்கோட்டை-சென்னை பொதிகை விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில நேரங்களில் இரண்டாவது நடைமேடையில் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக பொதிகை விரைவு ரயில் கடந்த ஒரு வார காலமாக இரண்டாவது நடைமேடையில் நிறுத்தப்படுகிறது. இதனால் முதியோா், ஊனமுற்றோா், கா்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடை மேடையில் நிறுத்த மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.