/

ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்

ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்

News image

டிரம்ப் - AP

Updated On :27 மார்ச் 2026, 5:34 am IST

ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீதான ராணுவத் தாக்குதல் மேலும் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வெளியிட்ட பதிவில், ‘ஈரானிய அரசின் வேண்டுகோளை ஏற்று, எரிசக்தி நிலையங்கள் அழிப்பு நடவடிக்கைகளை திங்கள்கிழமை, ஏப். 6, 2026, இரவு 8 மணி வரை நான் நிறுத்திக்கொள்கிறேன்.

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. போலியான ஊடகச் செய்திகள் மற்றும் பிறரின் பொய்யான தகவல்களுக்கு மத்தியில், பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெறுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளிடையே நடைபெற்றுவந்த போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 23) அறிவித்த நிலையில், மேலும் 10 நாள்களுக்கு அந்த முடிவு இன்று நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ‘ஒருதலைப்பட்ச’ அமைதித் திட்டம் - ஈரான் நிராகரிப்பு:

அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டம் ‘ஒருதலைப்பட்சமானது மற்றும் நியாயமற்றது’ என்று கூறி, ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

Summary

President Donald Trump announced today that his administration will continue to hold off on strikes to Iranian energy sites for another 10 days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.