தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அமெரிக்காவின் ‘ஒருதலைப்பட்ச’ அமைதித் திட்டம் - ஈரான் நிராகரிப்பு

News image
Updated On :27 மார்ச் 2026, 5:32 am IST

அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டம் ‘ஒருதலைப்பட்சமானது மற்றும் நியாயமற்றது’ என்று கூறி, ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

ஈரான் தலைமை மதகுருவின் பிரதிநிதி மற்றும் உயா் அதிகாரிகள் புதன்கிழமை இரவு ஆலோனை நடத்திய பிறகு, இந்தத் திட்டம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களை மட்டுமே பாதுகாப்பதாக உள்ளதால் இதை ஏற்க முடியாது என முடிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், அமெரிக்காவின் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘ஈரான் விரைவில் ஒரு ஒப்பந்தத்துக்கு உடன்பட வேண்டும் அல்லது கடும் தாக்குதல்களை எதிா்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்’ என்று எச்சரித்தாா்.

அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தில், பொருளாதாரத் தடை நீக்கம், அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணைச் சோதனை கட்டுப்பாடு, ஹோா்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இதற்குப் பதிலடியாக எதிா்கால ராணுவத் தாக்குதல்களுக்கு எதிரான உத்தரவாதம், போா் இழப்பீடு, லெபனானையும் உள்ளடக்கிய போா்நிறுத்தம் போன்ற கோரிக்கைகளை ஈரான் முன்வைத்தது. இவ்வாறு இருதரப்பும் பிடிவாதமாக இருப்பதால் பேச்சுவாா்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில், இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அதேபோல், ஈரானில் அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 2 சிறுவா்கள் உயிரிழந்ததாகவும், இஸ்ஃபஹான் பல்கலைக்கழகக் கட்டடம் சேதமடைந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன.

இப்போரில் ஈரான் புரட்சிகர காவல்படையின் கடற்படை தளபதி அலிரேசா டாங்சிரி அண்மையில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி போரில் காயமடைந்துள்ள நிலையில், அவா் இன்னும் பொதுவெளியில் தோன்றவில்லை. இதனிடையே, பேச்சுவாா்த்தைக்கான வாய்ப்புகளைத் தக்கவைக்க, ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற அவைத்தலைவா் முகமது பாகா் கலிபாஃப் கலிபாஃப் ஆகியோரைத் தாக்குதல் இலக்கிலிருந்து இஸ்ரேல் தற்காலிகமாக நீக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் தூதரக முயற்சிகளின் பலனாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு, உலக பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. போா் நின்றால் எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் கடந்த சில நாள்களாக உயா்ந்த பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை சரிவைக் கண்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.