ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என ஈரான் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சமூக ஊடகப் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, "ஈரான் வீழ்ச்சியடையும் நிலையில் இருப்பதாக எங்களிடம் தெரிவித்தனர். அவர்களின் தலைமையைத் தேடும் சூழ்நிலையில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க விரும்புவதாகவும் அவர்கள் கூறினர். இதை அவர்களால் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது. இருப்பினும், லெபனான் மீதான தாக்குதல் காரணமாக மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், உலகளவில் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் எண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
Summary
Iran wants to Open the Hormuz Strait, says US President Donald Trump
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
