மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்... - கோப்புப் படம்|AP

Updated On :6 மே 2026, 7:08 pm IST

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படவில்லை என்றால் ஈரான் மீது அதிகப்படியான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து, அமைதி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக்கொண்டால் இந்தப் போர் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் எனவும், எரிபொருள் விநியோகம் மீண்டும் தொடங்கும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா முன்மொழியும் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால் மீண்டும் ஈரான் மீதான தாக்குதல் தொடரும் எனக் கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று (மே 7) தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Trump threatened Iran with more bombing if it doesn't reopen the Strait of Hormuz

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.