வாஷிங்டன் : ஈரானுடன் அமைதிப்பேச்சில் ஈடுபட அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லவிருந்த பிரதிநிதிகள் குழுவினரின் பயணத்தை திடீரென ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பணித்தார்.
பாகிஸ்தான் முன்னிலையில் நடைபெறும் அமெரிக்கா உடனான 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 24) அன்று அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அராக்சி, ஈரானிய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி மற்றும் தூதர் ரெசா அமிரி மொக்தம் ஆகியோர் இன்று(ஏப். 25) காலை பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீரை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்க பிரதிநிதிக் குழுவினர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்தப் பயணம் இன்று திடீரென ரத்தாகியுள்ளது.
இது குறித்து டிரம்ப் தமது ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில் சனிக்கிழமை(ஏப். 25) இரவில் பதிவிட்டிருப்பதாவது :
“ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) செல்லும் எமது பிரதிநிதிகள் குழுவின் பயணத்தை இப்போதுதான் ரத்து செய்தேன்.
இந்தப் பயணத்தால் அதிக நேர விரயமும் அதிக பணிச் சுமையும் ஏற்பட்டது! அத்துடன், ஏகப்பட்ட குழப்பமும் அவர்களின் தலைமையில் நிலவுகிறது.
அங்கு யார் பொறுப்பு என்பதில் தெளிவில்லை. எங்களிடமே எல்லத் துருப்புச்சீட்டும் கையி உள்ளதே தவிர, அவர்களிடம் ஒன்றுமேயில்லை!
அவர்கள் பேச்சுவர்த்தைக்கு விரும்பினால்; எங்களைத் தொடர்புகொள்ளலாம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
trip to Pakistan for talks with Iran has been cancelled - US President Donald Trump posts on his Truth Social
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 கோடி பேர் காப்பாற்றப்பட்டனர்: டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் விருப்பம்: டிரம்ப் பேச்சு

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்லும் அமெரிக்க குழுவில் துணை அதிபர் இடம்பெறவில்லை!
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
