மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்! போர் விமானத்தை விரட்டிய ஹிஸ்புல்லா?

லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் குறித்து...

News image

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் (கோப்புப் படம்) - AP

Updated On :25 மார்ச் 2026, 6:48 pm IST

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு மாகாணங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் போர்த் தொடங்கியது.

வளைகுடா நாடுகளில் நிலவிய பதற்றமான சூழலுக்கு இடையே ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

கடந்த மார்ச் 2 முதல் ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிராக லெபனானின் தெற்கு மாகாணங்கள் மற்றும் தலைநகர் பெய்ரூட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றது.

லெபனானின் மக்கள் குடியிருப்புகள் அதிகம் நிரம்பிய பகுதிகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படும் நிலையில், இதுவரை 1,039 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், லெபனானில் இருந்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) மாலை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் மூலம் இஸ்ரேலின் போர் விமானம் குறிவைக்கப்பட்டதாகவும், இதன்மூலம், அந்த விமானம் அங்கிருந்து விரட்டப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா படையினர் அறிவித்துள்ளனர்.

Summary

Israeli army is carrying out continuous attacks on the Lebanese capital Beirut and the southern provinces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.