லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் முக்கிய தலைவர் ஒருவர் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு எதிரான அந்நாட்டின் மீது கடந்த மார்ச் 2 அன்று முதல் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த புதன்கிழமை (ஏப். 8) அன்று இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், பெய்ரூட் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நயீன் காசெமின் நெருங்கிய உறவினரும், ஆலோசகருமான அலி யூசஃப் ஹர்ஷி என்பவர் கொல்லப்பட்டதாக, வியாழக்கிழமை அன்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் வடக்கு மாகாணங்களின் பாதுகாப்பிற்காக லெபனானின் ஹிஸ்புல்லா படைகளின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், அப்பாஸியே எனும் கிராமத்தின் மீது இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், பெய்ரூட்டில் வெறும் 10 நிமிடங்களில் 100-க்கும் அதிகமான இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்தத் தாக்குதல்கள் மக்கள் குடியிருப்புகள் அதிகம் நிரம்பிய பகுதியில் நடத்தப்பட்டதால் 890-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பதிலடியாக இஸ்ரேலின் வடக்கு மாகாணங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
key leader of Hezbollah was killed in an attack carried out by Israel.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் பலி! போர்நிறுத்தம் முறிவு?

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!

ஈரானின் போர்நிறுத்தம் இங்கு பொருந்தாது..! லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி!

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்! போர் விமானத்தை விரட்டிய ஹிஸ்புல்லா?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


