ஈரானில், பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதலில் 165-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை கவுன்சிலில் வரும் மார்ச் 27 அன்று அவசர விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் நடைபெற்ற போரால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை மூலம் கடந்த பிப். 28 அன்று ஈரானின் மினாப் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், ஏராளமான குழந்தைகள் உள்பட 165-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலானது போர்க் குற்றம் எனக் கூறி சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், ஒரே வாரத்தில் வளைகுடா போர் பற்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெறும் 2 ஆவது விவாதத்தில், ஈரான், சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று மினாப் பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதல் குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் தலைவர் சிதார்த்தோ ரெசா சூர்யோதிபுரோ கூறுகையில், சர்வதேச ஆயுத மோதல்களில் குழந்தைகள் மற்றும் கல்வி நிலையங்களின் பாதுகாப்பு எனும் தலைப்பில் அவசர விவாதம் வரும் மார்ச் 27 அன்று நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
Summary
The UN Human Rights Council will hold an urgent debate on March 27 on the attack on a school in Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

போர்நிறுத்தம்! அமீரகம், ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தொடரும் தாக்குதல்!
ஈரான் மீதான தாக்குதல் தொடரும்! இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


