அமெரிக்காவுடன் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. மேலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஏப். 7) அன்று அறிவித்தார். இதை, ஈரான் அரசும் உறுதி செய்தது.
இந்த நிலையில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் ஈரானின் லாவன் தீவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, ஈரானின் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து புதன்கிழமை அன்று வீசப்பட்ட ஈரானின் ஏவுகணைகளை அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தகர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
attacks are being carried out against an oil refinery in Iran and the UAE, just hours after a ceasefire was announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! டிரம்ப் எச்சரிக்கை

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!

போர்நிறுத்தம் கோரவில்லை; அமெரிக்கா தண்டிக்கப்படும் வரை போர் தொடரும்! - டிரம்ப்புக்கு ஈரான் பதிலடி!

ஹோர்முஸ் திறக்கப்பட்டால் ஈரான் கேட்கும் போர்நிறுத்தம் பரிசீலனை! - டிரம்ப் பேச்சு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

