மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை இஸ்ரேல் ஆதரிப்பதாக அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்தது குறித்து...

News image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - AP

Updated On :13 ஏப்ரல் 2026, 6:44 pm IST

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை இஸ்ரேல் ஆதரிப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை (ஏப்.13) தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படாததால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் கடற்படையை முற்றுகையிடப்போவதாக சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

இதுகுறித்து இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நெதன்யாகு பேசியதாக காணொளி ஒன்றை அவரது அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.

அதில், "நாங்கள், நிச்சயமாக, டிரம்ப்பின் இந்த உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இஸ்ரேல் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

போர் நிறுத்தத்தை அறிவித்தவுடன் ஈரான் உடனடியாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அமெரிக்காவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அமெரிக்கா இந்த ஈரானின் கடற்படையை முற்றுகை செய்ய முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தபிறகு இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Israeli Prime Minister Netanyahu stated on Monday (April 13) that Israel supports a naval blockade against Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.