நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக செயல்படுவார்கள் என்று தெரிந்தே, அவையை உடனடியாகக் கூட்டுவதற்கான அவசியம் ஏன்? என்ற கேள்வியை திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு வரும் ஏப்.16 முதல் 18 வரை நடைபெற இருக்கிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ஆம் ஆண்டு முதல் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்துவதற்குமான மசோதாவை முன்வைப்பதை இந்த மூன்று நாள் சிறப்புக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுகுறித்து திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், “மத்திய அரசு தொகுதி மறுவரையறையில் கவனம் செலுத்துகிறது. வெகு நாள்களுக்கு முன்பே மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றுப்பட்டு விட்டது. மாநிலங்களவையில் மட்டும்தான் நிலுவையில் உள்ளது.
அந்த மசோதா எதுவாக இருந்தாலும், தமிழகம், கேரளம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கிறபோதும் மக்கள் பிரசாரத்தில் மிகவும் மும்முரமாக இருக்கின்றனர்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருப்பார்கள் என்று தெரிந்தே தற்போது ஏன் நாடாளுமன்ற அவையைக் கூட்ட வேண்டும். ஏனென்றால், மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது” எனத் தெரிவித்தார்.
Summary
T.K.S. Elangovan, DMK Spokespersons has raised the question: "Why is there a need to convene the Assembly immediately, knowing full well that Members of Parliament will be actively engaged in election campaigning?"
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டங்கள் வேண்டாம்: மாயாவதி
மக்களவை 37.9%, மாநிலங்களவை 46% திரிணமூல் பெண் உறுப்பினர்கள்: மமதா

மகளிர் இடஒதுக்கீடு ரத்து முட்டுக்கட்டை அல்ல, பெண்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: ஆந்திர முதல்வர்

மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


