நாடாளுமன்றத்தில் ஏப்.16 முதல் 18 வரையிலான தேதிகளில் காலை 11 மணிக்கு நடைபெறவிருக்கும் சிறப்பு அமர்வுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற மூன்று வரி உத்தரவை அக்கட்சி திங்கள்கிழமை (ஏப்.13) பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பிறப்பித்த அறிக்கையில், இந்த சிறப்பு அமர்வின்போது முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட உள்ளன. மேலும், மகளிர் இடஒதுக்கீட்டுக்கான நாரி சக்தி வந்தன் அதினியம் 2023 மசோதாவை மத்திய அரசு அமல்படுத்த உள்ளதால் கட்சியின் நிலைப்பாட்ட்டுக்கு அனைத்து எம்.பி.க்களும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ஆம் ஆண்டு முதல் 33 சதவிகித மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயா்த்துவதற்குமான மசோதாவை முன்வைப்பதை இந்த மூன்று நாள் சிறப்புக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறை மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கிறது. இதனால் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் குறையும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
குறிப்பாக, இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்காக மத்திய அரசு முன்மொழிந்துள்ள நிகழ்ச்சி நிரலானது, தொகுதி வரையறை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புவதாகத் தெரிவித்தார். மேலும், அதனை 'மிகவும் ஆபத்தானது' மற்றும் 'அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மூன்று வரி உத்தரவு என்பது கட்சியின் மிகக் கடுமையான வழிகாட்டுதலாகும். இது, உறுப்பினர்கள் அவையில் ஆஜராகி, கட்சியின் கொள்கைப்படி வாக்களிக்கவும், அதனைக் கண்டிப்பாகப் பின்பற்றவும் அறிவுறுத்துகிறது. இதை மீறினால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் கட்சித் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.
Summary
The Congress party issued a three-line whip on Monday (April 13), directing all its MPs to be present for the special session scheduled to be held in Parliament from April 16 to 18, commencing at 11:00 AM.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: மோடி

தமிழகத்தின் மிரட்டலை நாடாளுமன்றத்தில் செய்து காட்டிவிட்டோம்: கமல்ஹாசன்
தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படும்: ப. சிதம்பரம்

இந்தியப் பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


