லெபனானின் தெற்கு மாகாணங்களின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் மீது தாக்குதல் நடத்தியதால், இருதரப்புக்கும் இடையே போர் தொடங்கியது. இந்தப் போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் களமிறங்கினர்.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, கடந்த வியாழக்கிழமை (ஏப். 23) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாக தெற்கு லெபனானில் அமைந்திருந்த ஹிஸ்புல்லா படையின் தளவாடங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாகவும் இன்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இஸ்ரேலிய விமானப் படை வெளியிட்ட அறிக்கையில்,
“இஸ்ரேலின் ஷலோமி பகுதியின் மீது நேற்று இரவு ஹிஸ்புல்லா படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, லெபனானின் கிர்பெட் சலாம் மற்றும் துலின் பகுதிகளில் அமைந்திருந்த ராணுவத் தளவாடங்கள் தகர்க்கப்பட்டன” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, லெபனான் அதிபர் மற்றும் இஸ்ரேல் பிரதமர் ஆகியோர் விரைவில் அமெரிக்கா வருவார்கள் என அதிபர் டிரம்ப் கூறிய சில மணிநேரங்களில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Israel has announced that it carried out airstrikes on the southern provinces of Lebanon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் 10 நாள் போா்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!

ஈரானின் போர்நிறுத்தம் இங்கு பொருந்தாது..! லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி!
லெபனானில் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


