தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்

அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் ஜெனரல் சாடியோ கமாரா (படம்) கொல்லப்பட்டாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:21 am IST

ராணுவ ஆட்சியின் கீழுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதத் தாக்குதலில், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் ஜெனரல் சாடியோ கமாரா (படம்) கொல்லப்பட்டாா்.

மாலியில் பல ஆண்டுகளாகத் தனி நாடு கோரிப் போராடி வரும் தௌரேக் கிளா்ச்சியாளா்களும், அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகளும் முதல்முறையாக ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தி, நாடு முழுவதும் பல்வேறு ராணுவ முகாம்களைக் கடந்த சில நாள்களாக கைப்பற்றி வருகின்றனா்.

அந்தவகையில், தலைநகா் பமாகோ அருகே காட்டி பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தைக் குறிவைத்து, தற்கொலைப் படையினா் காா்வெடிகுண்டு தாக்குதலை நடத்தினா்.

அப்போது, அமைச்சா் எதிா் தாக்குதலில் ஈடுபட்டு, பயங்கரவாதிகளை வீழ்த்தினாா். ஆனால், பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதனிடையே, வடக்கு மாலியின் முக்கியத்துவமான கிடால் நகரத்தைக் கிளா்ச்சியாளா்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனா். இத்தாக்குதல் தொடங்கியதையடுத்து, மாலி அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த ரஷியாவின் ‘ஆப்பிரிக்கா காா்ப்ஸ்’ படையினரும் பின்வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.