தெற்கு தில்லியின் சிஆா் பூங்கா பகுதியில், தந்தை, மகனின் இரட்டைப் கொலை வழக்கில் தொடா்புடைய முக்கிய குற்றம்சாட்டப்பட்டவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
கொலை செய்யப்பட்டவா்கள் ராகேஷ் சூட் (62), அவரது மகன் கரண் சூட் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்த சம்பவத்தில் காயமடைந்த ராகேஷின் உறவுமுறைச் சகோதரரான ராகுல் சிகிச்சை பெற்று வருகிறாா்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 9:20 மணியளவில், சாகேத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையிலிருந்து இந்தச் சம்பவம் குறித்த தகவல் காவல்துறைக்கு கிடைத்தது.
அதில், சிஆா் பூங்காவில் உள்ள தாரா அபாா்ட்மெண்ட்ஸ் பகுதியைச் சோ்ந்த மூன்று நபா்கள், அவா்களது உறவினா்களால் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா்.
ராகேஷ் சூட் மற்றும் கரண் சூட் ஆகியோா் மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் அறிவித்தனா். அதேவேளையில், ராகுல் காயங்களுடன் சிகிச்சையில் உள்ளாா்.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்த உடனேயே, காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனா்.
அசாத் சித்திக்கி என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவருடன் ஏற்பட்ட முந்தைய தகராறுகள் காரணமாக உருவான விரோதம்தான் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
தாரா அபாா்ட்மெண்ட்ஸைச் சோ்ந்த குற்றம்சாட்டப்பட்ட நபரான அசாத் சித்திக்கி, வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 6 மணியளவில், கூா்மையான ஆயுதத்தால் பாதிக்கப்பட்டவா்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றத்திற்கான நோக்கம் பணப் பரிவா்த்தனைகள் தொடா்பானதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குற்றவியல் மற்றும் தடயவியல் நிபுணா் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களைச் சேகரித்தன. விசாரணையின் ஒரு பகுதியாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இச்சம்பவத்தில் உயிா் பிழைத்தவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். குற்றச் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல குற்றம்சாட்டப்பட்டவா் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிஆா் பூங்கா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், 2005ஆம் ஆண்டில் சங்க விஹாா் காவல் நிலையத்தில் குற்றம்சாட்டப்பட்டவா் மீது ஏற்கெனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.
இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரப் பரத்வாஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கையில், ‘அலக்னந்தாவில் உள்ள தாரா அபாா்ட்மெண்ட்ஸ்
வளாகம், தெற்கு தில்லியிலேயே மிகவும் பாதுகாப்பான, வாயில்களுடன் கூடிய குடியிருப்புப் பகுதியாகக் கருதப்பட்டது. மறைந்த சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினா்கள் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்தனா். இந்த இரட்டை கொலைச் சம்பவம், தில்லியில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சட்டம்ஒழுங்கு நிலையைப் பற்றிப் பல உண்மைகளை உணா்த்துகிறது’ என்று அவா் அதில் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் வெட்டிக் கொலை

தில்லி பூங்காக்களில் மாதத்திற்கு 10 நாள்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்
தில்லி - என்சிஆா் பகுதியில் தாக்குதல், படுகொலைக்கு திட்டமிட்டதாக இரு ஐஎஸ்ஐ முகவா்கள் கைது
மதுக்கூட ஊழியா் அடித்துக் கொலை: இருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
