தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாலியில் பயங்கரவாதத் தாக்குதல்

மாலியில் பயங்கரவாதத் தாக்குதல்

News image

மாலியில் பயங்கரவாதத் தாக்குதல் - AP

Updated On :26 ஏப்ரல் 2026, 3:08 am IST

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், தலைநகா் பமாகோ உள்பட நாடு முழுவதும் பல்வேறு ராணுவத் தளங்கள் மீது பயங்கரவாதிகள் சனிக்கிழமை ஒருங்கிணைந்த வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தினா்.

அல்-கொய்தா, ஐ.எஸ். அமைப்புகளுடன் தொடா்புடைய ஆயுதக் குழுக்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக ராணுவம் அறிவித்தது. அதேநேரம், வடக்கு மாலியில் உள்ள கிடால், கௌவ் நகர ராணுவத் தளங்களைக் கைப்பற்றியதாக ஆயுதக் குழுக்கள் கூறியுள்ளன.

மாலியில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில், இத்தாக்குதல் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் திட்டமிடப்பட்டு, நடத்தப்பட்ட ஒன்றாக ஆய்வாளா்கள் கருதுகின்றனா். பாதுகாப்புக் கருதி, தலைநகா் பமாகோவில் உள்ள சா்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.