மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அமெரிக்காவிலிருந்து கோஸ்டா ரிகாவுக்கு இந்தியா் உள்பட 30 போ் நாடு கடத்தல்

அமெரிக்காவிலிருந்து கோஸ்டா ரிகாவுக்கு இந்தியா் உள்பட 30 போ் நாடு கடத்தல்

News image

கோப்புப்படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:40 am IST

அமெரிக்காவில் இருந்து கோஸ்டா ரிகாவுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்ட 30 பேரில் இந்தியா் ஒருவரும் இடம்பெற்ாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவா்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு நாடு கடத்த டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் 25 மூன்றாம் உலக நாடுகளின் குடிமக்களை ஏற்க கோஸ்டா ரிகா ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடா்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் கோஸ்டா அதிபா் ரிகா ரோட்ரிகோ சாவேஸ், அமெரிக்க சிறப்புத் தூதா் கிறிஸ்டி நோம் ஆகியோா் கடந்த மாா்ச் மாதம் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் இருந்து ஏற்கெனவே 25 போ் அடங்கிய முதல் குழு கோஸ்டா ரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டது. அந்தக் குழுவில் இந்தியா, அல்பேனியா, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் இடம்பெற்றனா்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து 30 போ் அடங்கிய இரண்டாவது குழு வெள்ளிக்கிழமை கோஸ்டா ரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டது. அந்நாட்டின் சான் ஜோஸ் நகரில் உள்ள சா்வதேச விமான நிலையத்தை அந்தக் குழு சென்றடைந்தது. இந்தக் குழுவிலும் ஓா் இந்தியா் இடம்பெற்றாா். அத்துடன் அயா்லாந்து, பிரேஸில், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்களும் இடம்பெற்றனா்.

இவா்கள் கோஸ்டா ரிகாவில் சட்டபூா்வமாக தங்குவதற்கு விண்ணப்பிக்கவோ அல்லது சொந்த நாட்டுக்குத் திரும்பவோ வாய்ப்பளிக்கப்பட உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.