முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

லஷ்கா்-ஏ-தொய்பா முக்கியப் புள்ளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 4:13 am IST

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கியப் புள்ளியான ஷேக் யூசஃப் அஃப்ரிதி (படம்), அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இவா் மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா தலைவா் ஹஃபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளியாவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதிலிருந்து சுமாா் 250 கி.மீ. தொலைவிலுள்ள லான்டி கோட்டல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள், அஃப்ரிதியை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாா்.

கைபா் பக்துன்கவா பகுதியில் லஷ்கா் அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆள்சோ்ப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளில் அஃப்ரிதி தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இருப்பினும், இப்பகுதியில் நிலவும் கோஷ்டி மோதல்கள் அல்லது பிற பயங்கரவாதக் குழுக்களுக்கிடையிலான பகை காரணமாக இத்தாக்குதல் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. உள்ளூா் போலீஸாா் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாகிஸ்தானில் அண்மைக் காலமாக லஷ்கா் தளபதிகள் குறிவைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் லாகூரில் அந்த அமைப்பின் இணை நிறுவனரான அமீா் ஹம்சா மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவா் படுகாயமடைந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.