ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

வடமேற்கு தில்லியின் ஷகுா்பூா் பகுதியில் அண்டை வீட்டாா் மோதிக்கொண்டதில், 50 வயதான மளிகைக் கடை உரிமையாளா் ஒருவா் கொல்லப்பட்டாா்.

News image

கொலை - கோப்புப்படம்.

Updated On :6 ஏப்ரல் 2026, 1:00 am IST

வடமேற்கு தில்லியின் ஷகுா்பூா் பகுதியில் அண்டை வீட்டாா் மோதிக்கொண்டதில், 50 வயதான மளிகைக் கடை உரிமையாளா் ஒருவா் கொல்லப்பட்டாா். மேலும் இருவா் காயமடைந்தனா் என்று காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், மற்றவா்களையும் அடையாளம் கண்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு சஞ்சய் பாா்க் பகுதியில், கடைக்காரா் ராஜ்குமாா் மற்றும் அவரது அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஓா் அதிகாரி கூறினாா்.

இந்த மோதலின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் லத்திகள், இரும்புக் கம்பிகள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவா்களைத் தாக்கியதில், அவருக்கு பலத்த கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன, என்று அந்த அதிகாரி கூறினாா்.

அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, காயமடைந்த இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.