ஆங்கிலேயர் ஆட்சியின்போது, சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளை நிர்வகித்து வந்த ஜமீன்தார்கள், முன்சீப், நிலச்சுவான்தார்கள் நெய்யமலைக் கிராமங்களில் வாழ்ந்த பழங்குடியினரோடு இணக்கமான நட்புறவைக் கொண்டிருந்தனர். இங்குள்ள கோயில்களுக்கு நன்கொடையாக அவர்கள் வழங்கிய விளக்குத் தூண்கள் நூற்றாண்டு கடந்து இன்றளவும் கம்பீரமாய் சமூக நல்லிணக்கத்தைப் பறைசாற்றுகின்றன.
வாழப்பாடியை அடுத்த இடையப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நெய்யமலையில் நெய்யமலை, அக்கரைப்பட்டி, ஆலங்கடை ஆகிய 3 மலைக் கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இயற்கையோடு இயைந்து விவசாயம், அதனை சார்ந்த தொழில்களைச் செய்து வரும் நெய்யமலைக் கிராம மக்களோடு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் கிராமங்களை நிர்வகித்து வந்த ஜமீன்தார், முன்சீப் என்று அழைக்கப்பட்ட நிலச்சுவான்தார்கள் இணக்கத்தோடு நட்புறவு கொண்டிருந்தனர்.
இவர்கள் மலைக் கிராம மக்கள் தயாரிக்கும் விளைபொருள்களை விற்பனை செய்யவும், அத்தியாவசியப் பொருள்களை கொள்முதல் செய்வதற்கும் தேவையான உதவிகளைச் செய்து, சமூக நல்லிணக்கத்தோடு வழிகாட்டியுள்ளனர்.
1923-இல் நெய்யமலையிலுள்ள பழமையான ராமர் கோயில் திருப்பணியின்போது, கிராம மக்களுக்கு அப்போதைய செக்கடிப்பட்டி ஜமீன்தார் ஆனந்தபடையாச்சி, இடையப்பட்டியைச் சேர்ந்த முன்சீப் ஆறுமுகக்கவுண்டர் ஆகியோர் தீபம் ஏற்றும் விளக்குத்தூணை நன்கொடையாக அமைத்துள்ளனர். இருபது அடி உயரம் கொண்ட கற்தூண்களில் இருவரின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இன்றும் அந்தக் கற்தூண்களிலேயே, புரட்டாசி சனிக்கிழமை, கார்த்திகை தீபம் உள்ளிட்ட விழாக்காலங்களில் நெய்ய
மலைக் கிராம மக்கள் தீபம் ஏற்றி, வழிபட்டு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் பெருமாள் கோயில் திருப்பணியின் போதும், கல்தூணை அகற்றாமல் சீரமைத்ததோடு இன்றும் பாதுகாத்து வருகின்றனர்.
-பி.எம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெரியுமா?

நெய்யமலைக் கிராமத்தில் நூற்றாண்டு கடந்து நிற்கும் விளக்குத்தூண்கள்!
கபடியில் கலக்கும் 'இளம்புயல்'

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் நடமாடும் வன விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
