நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மிக்ஸி பிளேடுகளை கூராக்குவது எப்படி?

மிக்ஸியின் பிளேடுகள் சிலநாள் பயன்பாட்டுக்குப் பின்னர் மழுங்கி சரியாக அரைக்காது.

News image
Updated On :17 மே 2026, 4:02 am IST

மிக்ஸியின் பிளேடுகள் சிலநாள் பயன்பாட்டுக்குப் பின்னர் மழுங்கி சரியாக அரைக்காது. இந்தச் சூழலில் அவற்றைப் பழையபடி கூராக்குவதற்காக, பழுது பார்க்கும் கடைகளுக்கு எடுத்துச் செல்வர். கூர் செய்து மீண்டும் மாட்டுவர். அதனை கழட்டாமலேயே கூர் செய்ய சில வழிகள் உள்ளன.

முட்டை ஓடுகளை சுத்தம் செய்து, உலர்த்தி மிக்ஸி ஜாருக்குள் போட்டு சில விநாடிகள் இயக்கவும். முதலில் அது பிளேடுகளில் சற்றே சொரசொரப்பான தன்மை கொண்டு ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குகளை அகற்றும். பின்னர், அதன் கூர்மைக்கு உதவும்.

கல் உப்பின் கரடுமுரடான துகள்களை ஜாருக்குள் போட்டு சுற்றும்போது, பிளேடு விளிம்புகளில் உள்ள மழுங்கிய பகுதியை எளிதில் கூர்மையாக்கும்.

பனிக்கட்டிகளை எடுத்து ஜாருக்குள் போட்டு சில விநாடிகள் இயக்கினால், அவை உடையும்போது அதன் கடினத் தன்மையால் பிளேடு முனைகள் கூர்மை பெறும். வெட்டும் திறனும் மேம்படும்.

சமையல் சோடாவை தண்ணீருடன் கலந்து கெட்டியான பசை போல் செய்து, ஒரு பிரஷின் உதவியுடன் அதனை பிளேடில் தடவி, ஐந்து நிமிடம் வைத்திருக்கவும். பின்னர் துணியால் அழுந்தத் துடைத்தால், அழுக்குகள் வருவதுடன் அதன் சொரசொரப்பால் பிளேடின் விளிம்புகளையும் சுத்தம் செய்து விடும்.

அலுமினியத் தாளை எடுத்து அதனை உருண்டையாக உருட்டி மிக்ஸி ஜாரில் போட்டு சில விநாடிகள் இயக்கவும். இது பிளேடுகளில் உள்ள சிறு குறைகளை சரிசெய்யும். செயல் திறனை மேம்படுத்தவும் உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.