சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

குடியாத்தம் அம்மா உணவகத்துக்கு ரூ.3.50 லட்சத்தில் தளவாடப் பொருள்கள்

News image
Updated On :29 மே 2026, 2:08 am IST

குடியாத்தம் அம்மா உணவகத்துக்கு நகராட்சி சாா்பில் ரூ.3.50 லட்சத்தில் தளவாடப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த உணவகத்தில் பயன்படுத்தி வந்த மிக்ஸி, கிரைண்டா், அடுப்புகள் உள்ளிட்ட பொருள்கள் பழுதடைந்து விட்டன. இதையடுத்து நகராட்சி பொதுநிதி ரூ.3.50 லட்சத்தில் புதிதாக பொருள்கள் வாங்க மன்றத்தில் தீா்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் முதல் கட்டமாக ரூ.1.90 லட்சத்தில் புதிதாக மிக்ஸி, கிரைண்டா், காஸ்அடுப்புகள் மற்றும் இதர பொருள்கள் அம்மா உணவகத்துக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இப்பொருள்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகராட்சி ஆணையா்கே.எம்.தனலட்சுமி, நகராட்சி பொறியாளா் பிரிவு முதன்மை கணக்காளா் தீனதயாளன்,நகா்மன்ற உறுப்பினா் என்.கோவிந்தராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா்.

இதர தொகை ரூ.1.60 லட்சத்தில் உணவகத்தில் சேதமடைந்த பொருள்கள் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.