லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆதார் சேவை மையங்களுக்குச் செல்ல முன்பதிவு செய்யலாம்! எப்படி?

ஆதார் சேவை மையங்களுக்குச் செல்ல முன்பதிவு செய்வது எளிது.. எப்படி என்பது பற்றி..

Booking Appoinment

ஆதார் அட்டை - கோப்புப் படம்

Published On :26 மே 2026, 12:34 pm IST

ஆதார் அட்டையில் இருக்கும் எழுத்துப் பிழைகள், இனிஷியல் மாற்றம், முகவரி போன்றவற்றை மாற்ற ஆதார் சேவை மையங்களுக்குச் செல்வோர், அங்கு பல மணி நேரம் காத்திருக்கத் தேவையில்லை.

காரணம், ஆதார் சேவை மையத்தில் (#ASK) சேவைகளைப் பெறுவதற்கான சந்திப்பு நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம். இப்போது அது மிக எளிதாகவும் வசதியாகவும் உள்ளது.

நீங்கள் முன்பதிவு செய்த நேரத்துக்கு குறிப்பிட்ட ஆதார் மையத்துக்குச் சென்று உங்கள் வேலைகளை எளிதாக முடித்துக் கொண்டு விரைவாக வீட்டுக்கு வந்துவிடலாம். இதனால் பல மணி நேரம் காத்திருக்கத் தேவையில்லை.

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது எப்படி?

1. myAadhaar இணையதளத்திற்குச் சென்று ‘Book Appointment’ என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது https://bookappointment.uidai.gov.in என்ற இணைப்பிற்குச் செல்லவும்.

2. உங்கள் அல்லது ஆதார் அட்டை அப்டேட் செய்யப்பட வேண்டியவரின் விவரங்களை உள்ளிடவும்.

3. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணுக்கு வரும் OTP யை உள்ளிட்டு விவரங்களை சரிபார்க்கவும்.

4. அனைத்தும் சரியாக இருப்பின், “Centre Appointment” என்பதைத் தேர்ந்தெடுத்து, மாநிலம், நகரம் அல்லது PIN குறியீடு அல்லது “Nearby” அல்லது சரியான முகவரி பயன்படுத்தி உங்களுக்கு அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

5. தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

6. எந்த சேவை தேவை என்பதை தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு வரும் படிவத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.

7. முன்பதிவு செய்த தேதி மற்றும் நேரத்தில் ஆதார் சேவை மையத்திற்கு வரவும்.

9. அங்கு கொடுக்கப்படும் ஒரு படிவத்தில் விவரங்களைப் பூர்த்திசெய்து கொடுத்து வரிசையில் நிற்காமல் உங்கள் எண் அழைக்கப்படும்போது விரைவாக வேலையை நிறைவு செய்து கொள்ளலாம்.

ஆதார் செயலி மூலம் முன்பதிவு செய்ய, ஆதார் செயலிக்குள் சென்று நகரத்தை தெரிவு செய்யவும். பிறகு செல்போன் எண்ணை உள்ளிட்டு, கேப்சாவை சரியாக பதிவு செய்து ஓடிபி பெறவும்.

ஓடிபியை உள்ளிட்டு, ஆதார் சேவை மையம் எந்த மாநிலத்தில் இருக்கிறது, எந்த நகரத்தில் இருக்கிறது, என்பதை தெரிவு செய்தால், அங்குள்ள ஆதார் சேவை மையங்களின் பட்டியல் வரும். அதில் உங்களுக்கு அருகில் இருக்கும் சேவை மையத்தை தெரிவு செய்து சப்மிட் கொடுக்கவும்.

பிறகு, பெயர், உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்து எந்த விதமான ஆவணங்களைக் கொண்டு வரப்போகிறீர்கள் எனப்தையும் பதிவு செய்து கொள்ளலாம்.

அனைத்தும் முழுமை பெற்றதும், எந்த தேதி மற்றும் நேரத்தில் ஆதார் சேவை மையத்துக்கு வருகை தரப்போகிறீர்கள் என்பதை தெரிவு செய்து கொண்டு சப்மிட் செய்தால், உங்கள் முன்பதிவு கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கான விவரங்கள் வெளியே வரும்.

அவற்றை சரி பார்த்துக் கொண்டு விண்ணப்பப் படிவத்தை உருவாக்க என்பதற்கு அருகில் இருக்கும் கிளிக் ஹியர் என்பதை சொடுக்கினால், ஒரு விண்ணப்பம் வரும். அதனை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

Summary

It's easy to make reservations to visit Aadhaar service centers.. Here's how..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.