மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாமியார் தினத்தை மருமகன்களும் கொண்டாடலாமே...!

அக். 25ஆம் தேதி மாமியார் தினத்தை மருமகன்களும் கொண்டாடி மகிழலாம்தானே...

மாமியார் நாள் கொண்டாட்டம்

மாமியார் நாள் கொண்டாட்டம்

Published On :25 அக்டோபர் 2026, 10:01 am IST

காலம் மாறிவிட்டது, கொண்டாட்டங்கள் என்றாலே, ஏதோ பெண்களுக்கானது என்பது போல அல்லாமல், இந்த மாமியார் தினத்தில் மருமகன்களும் தங்களது மாமியார்களை சந்தோஷப்படுத்தும் வகையில் பரிசுகள் கொடுத்து கொண்டாடலாம். ஏனென்றால் காலம் மாறிவிட்டது.

ஒருவேளை நீங்கள் அன்னையர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுபவராகவோ அல்லது அன்றைய நாளில், தாய்க்கு பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுக்கும் மகனாகவோ இருந்தால், உங்கள் மாமியாரை சந்தோஷப்படுத்தும் வகையில், அக். 25 மாமியார் நாளில், வாழ்க்கைத் துணையின் தாயாருக்கும் பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுப்பது மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது போன்றவற்றை செய்யலாம்.

இது மாமியாருக்கு மகிழ்ச்சியை கொடுப்பதோடு, உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பிறகென்ன உங்கள் வாழ்வில் தினமும் தீபாவளிதான்.

பொதுவாகவே பெற்றப் பிள்ளைகளைவிட, மருமகன்கள் மீது மாமியார்களுக்கு அக்கறையும் அன்பும் அதிகம். (தன் மகளை தனி ஆளாக சமாளிக்கிறாரே என்ற அனுதாபமாக இருக்கலாம்! என நக்கலடிப்பது கேட்கிறது). மருமகனுக்குப் பிடித்த உணவை தயாரித்துக் கொடுப்பது, வீட்டில் எப்போதும் மருமகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மகளுக்குத் திருமணமாகி, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மருமகனின் மீதான மரியாதை மட்டும் எப்போதும் குறையாமல் பார்த்துக் கொள்வதில் மாமியார்கள்தான் தனிரகம்.

எனவே, இந்த ஆண்டு மாமியார்கள் நாள் அக். 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கிறது. எனவே, அன்றைய நாளில், தன்னுடைய தாய்க்கு நிகராக அன்பு காட்டும் மாமியாருக்கு பரிசு பொருள், புடவை, பிடித்த உணவு போன்றவற்றை வாங்கிக் கொடுத்து, சிறந்த மருமகன் பட்டத்தைத் தட்டிச் செல்லலாம்.

அதுபோல புதிதாகத் திருமணமான தம்பதியாக இருந்தால், அவரவர் தங்களது மாமியார்களை கவர இந்த நாளை சிறப்பாகப் பயன்படுத்தி, சிறந்த மருமகள்/மருமகன் என பெயர் வாங்குவதற்கு பிள்ளையார் சுழி போடலாம்.

மாமியார் நாள் என்றாலே, மாமியார் - மருமகள் சண்டைகள், மோதல்கள் குறித்துப் பேசாமல், மாமியார்கள் தினத்தை மருமகன்களும் கொண்டாடலாம் என சிந்தியுங்கள். இதுவே உங்கள் தாய் மீது, மனைவிக்கு பாசம் ஏற்பட வழி பிறக்கலாம். பிறக்கவில்லையென்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.